கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது அடிக்கடி சில சுவாரசிய சம்பவங்கள் மைதானங்களில் நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியிலும் அதை போன்ற ஒரு சம்பவம் நடைபெற்று ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இன்றைய போட்டியின் 46 ஓவரை நியூசிலாந்து அணியின் சவுதி வீசினார். அதிவேகமாக பந்து வீசும் திறன் படைத்த சவுதி பந்து வீச தயாரான போது, காற்று சற்று பலமாக வீசியது.

Advertisment

இதனால் கேப்டன் வில்லியம்சன் தலையில் இருந்த தொப்பி காற்றில் பறந்து பவுண்டரி எல்லை நோக்கி ஓட ஆரம்பித்தது. வில்லியம்சன் காற்றில் பறந்த அந்த தொப்பியை துரத்த, தொப்பி காற்றில் பறந்து ஓட என பார்ப்பவர்கள் சிரிக்கு விதத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக பவுண்டரி எல்லைக்கு சென்று அந்த தொப்பி நின்றது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.