/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat-kohli-rcb-final_2.jpg)
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி 2008-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 200-ஐத் தொட்டுள்ளது. இதில், 185 போட்டிகள் ஐபிஎல் தொடரிலும், 15 போட்டிகள் சாம்பியன் லீக் தொடரில் விளையாடியதும் அடக்கம். 200 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை 5 சதங்கள், 40 அரைசதங்கள் அடித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)