Virat Kohli

500 பவுண்டரிகளை அடித்த வீரர்கள் என்ற சாதனைப் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார்.

Advertisment

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 39 -ஆவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் 4 ஓவர்கள் பந்துவீசி, அதில் 2 ஓவர்கள் மெய்டன் செய்து, 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisment

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

விராட் கோலி, இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது வீரர் ஆவர். 547 பவுண்டரிகளுடன் ஷிகர் தவான் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.