Skip to main content

வெங்கடேஷ் ஐயர் பதிவிட்ட வீடியோ; கடுமையாக விமர்சிக்கும் மக்கள் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video

 

இந்திய  கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 

ஐ.பி.எல். போட்டிகள் மூலம் அறிமுகமான கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், தனது சிறப்பான ஆட்டங்களால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். இந்திய அணியில் சில போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல்-லில் மொத்தம் 36 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 956 ரன்களை எடுத்துள்ளார். இந்த வருடம் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தமிழக வீரரான வெங்கடேஷ் ஐயர் பங்கேற்று விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  ஏழாவது தரவரிசை பெற்று பிளேஆஃப்க்கு  செல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 

 

ஐ.பி.எல். போட்டி முடிந்துள்ள நிலையில், வெங்கடேஷ் ஐயர் தமிழகத்தின் கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பல கோவில்களைச் சுற்றிப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். அந்தக் கோவிலில் வேத பாடசாலையும் இயங்கி வருகிறது. 

 

Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video

 

அந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். மேலும், அந்த மாணவர்களுடன் வெங்கடேஷ் ஐயர் கோவில் வளாகத்திற்குள் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதை அங்கிருந்த மாணவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வெங்கடேஷ் ஐயர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது. அதே சமயம், கோவிலுக்குள் வெங்கடேஷ் ஐயர் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

செம்பரம்பாக்கம் ஏரி : ‘உபரி நீர் திறப்பு அதிகரிப்பு’ - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Excess water release from Chembarambakkam Lake' - Flood warning to public

 

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.53 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அதாவது 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3 ஆயிரத்து 286 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று (30.11.2023) காலை 8 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம், குன்றத்தூரில் தலா 8.3 செ.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிரட்டிய மேக்ஸ்வெல்! மெர்சல் ஆன இந்திய பவுலர்கள்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 கவுகாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 5 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 24/2 என்ற நிலையில் கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார். ருதுராஜ் ஒரு முனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் சூரியகுமார் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்காமல், கேப்டன் சூர்யகுமார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து திலக் வர்மா ருதுராஜ் இணை ஆரம்பத்தில் சற்று பொறுமையாக ஆடியது. பின்னர் தனது அதிரடி துவங்கிய ருத்ராஜ் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் ருத்ர தாண்டவம் ஆடினார். திலக் வர்மா ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ருதுராஜ் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சிக்ஸர் அடித்து 52 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் முதல் டி20 சதமாகும். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார். மேக்ஸ்வெல்லின் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருத்ராஜ் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில்  ஒருவரான ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஆவேசமாக ஆடத் தொடங்கினார். ஆவேஸ் கான், ஹெட்டை 35 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். அடுத்து வந்த இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இணை ஓரளவு நிலைத்து ஆட, ஸ்டாய்னிஸ் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். பின்னர் இணைந்த வேட், மேக்ஸ்வெல் இணை சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பார்த்தும் பயனளிக்கவில்லை. 47 பந்துகளில் சதம் கடந்த மேக்ஸ்வெல், ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து வெற்றி தேடித் தந்தார். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வேட் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 20 ஒவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

- வெ.அருண்குமார்  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்