Published on 23/07/2021 | Edited on 23/07/2021
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுதொடங்கியுள்ளன.
தற்போது ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக இந்த தொடக்க விழாவில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளின் சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளார். கரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இந்த ஒலிம்பிக்கில், ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.