கிரிக்கெட் வீரர் கருணாரத்னே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் சமீகா கருணாரத்னே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. அண்மையில் நடந்த டி20 உலகக்கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு பின்பே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சமீகா கருணாரத்னே தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதால் அவருக்கு இந்திய பண மதிப்பில் 4 லட்சம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.