Skip to main content

தடைக்காலம் நிறைவு... மீண்டும் அணியில் ஸ்ரீசாந்த்???

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

sreesanth

 

 

கடந்த காலங்களில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீசாந்த் இருந்து வந்தார். களத்தில் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் விதமும், வெளிப்படுத்தும் கோபமும் பலமுறை சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்ட சர்ச்சை பெரிய அளவில் கிளம்பியது. அதில் ஸ்ரீசாந்த் பெயரும் இடம்பெற்றது. பின் விசாரணையில் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின் அந்த தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்த் தன்னுடைய ஏழு ஆண்டு தடைக்காலத்தை நிறைவு செய்துள்ளார். தடை முடிந்தவுடன் நிச்சயம் அணிக்கு திரும்புவேன் என்று ஸ்ரீசாந்த் முன்னர் கூறியிருந்தார்.

 

அதன்படி உடல்தகுதி மற்றும் தேவையான இன்னபிற சோதனைகளை நிறைவு செய்யும் பட்சத்தில், அவர் முதற்கட்டமாக உள்ளூர் போட்டிகளுக்கான அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

விஜய் சேதுபதி படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Indian cricketer sreesanth starring KaathuVaakula Rendu Kaadhal film

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் காதுவாக்குல படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முஹம்மது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த்-க்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு முடிவடைந்ததையடுத்து, தற்போது மாநில கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே அவர் டிவி நிகழ்ச்சி மற்றும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

sreesanth

 

சூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீசாந்த் முதல்முறையாக கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்க இருக்கிறார்.

 

இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், ஐ.பி.எல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின், அவர் 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ தடைவிதித்தது. இத்தடைக்காலத்தை ஸ்ரீசாந்த் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார்.

 

இந்நிலையில், கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் 20 ஓவர் தொடரில் ஸ்ரீசாந்த் பங்கேற்க இருக்கிறார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இவர் கே.சி.எ டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

 

டிசம்பர் மாத நடுவில், இத்தொடரை துவக்கி, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடிக்க கேரள கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் முறையான அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.