dhoni

இந்த ஐ.பி.எல் தொடரானது, அணித்தேர்வு விஷயத்தில்தோனிக்கு பெரும் சவாலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

13 -ஆவது ஐ.பி.எல் தொடரானது நாளை அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. இரண்டு பிரதான அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி என்பதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான சஞ்சய் பங்கர் தோனி குறித்தும், சென்னை அணி குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "தோனி கேப்டனாக நிறைய அனுபவம் உள்ளவர். அவர் வழிநடத்தும் சென்னை அணியிலும் அனுபவம் வாய்ந்த நிறைய வீரர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த அத்தனை வீரர்களையும் அவர் களத்தில் எப்படிக் கையாளப் போகிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவருக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை ஃபீல்டிங் என்பது மிக முக்கியம். மூத்த வீரர்களைச் சரியான இடத்தில் நிறுத்தி அணியைத் திறம்பட வழிநடத்துவது தான் அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்" என்றார்.