16வது ஐபிஎல் சீசனின் 13வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 204 ரன்களை குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை பறி கொடுத்ததால் இறுதிக்கட்டத்தில் அந்த அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரிங்கு சின் ஆட்டத்தின் இறுதி 5 பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றி கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
முன்னதாக, சேஸிங்கின் போது 20வது ஓவரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தவராக சென்னை அணியின் கேப்டன் தோனி இருந்தார். 2019 ஆம் ஆண்டு நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி அடித்த 26 ரன்களே சாதனையாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரின்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி சேஸிங்கின் போது இறுதி ஓவரில் 30 ரன்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை ரிங்கு சிங் பெற்றுள்ளார்.