Published on 19/09/2020 | Edited on 19/09/2020

13 -ஆவது ஐ.பி.எல் தொடரானது அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியினை வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதால் அவரால் இத்தொடரில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு ரெய்னா வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
அதில் அவர், "அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகள். நான் அணியில் இல்லையென்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது. என்னுடைய வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.