Preity Zinta

ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தாதீர்கள் என பஞ்சாப் அணியினருக்கு அவ்வணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

13-வது ஐ.பி.எல் தொடரின் 31 -ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பாகச் சென்ற இப்போட்டியில், பஞ்சாப் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல்முதலாகக் களமிறங்கிய கெயில், அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இந்த வெற்றி குறித்து, பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிக முக்கியமான வெற்றி. கிரிக்கெட் என்ற பெயரில் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் வகையில் பஞ்சாப் அணி வீரர்கள் விளையாடக் கூடாது என விரும்புகிறேன். பஞ்சாப் அணியின் கிரிக்கெட் என்பது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல. களத்தில் இறுதிவரை போராடிய பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களுக்குப் பாராட்டுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.