
2008 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் ஏலம் சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்திற்கு தயாராகும் வகையில், ஐபிஎல் அணிகள் ஏற்கனவே தங்கள் அணிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.