ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

peter siddle retires from international cricket

Advertisment

Advertisment

35 வயதான சிடல் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த 13-ஆவது வீரா் பீட்டா் சிடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வை அறிவிக்கும் போது பேசிய சிடல், "மொஹாலி ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியது, என் பிறந்தநாளில் ஆஷஸ் தொடரில் ஹாட்ரிக் எடுத்தது ஆகியவை என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்" என தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக சிடல் தெரிவித்துள்ளார்.