Skip to main content

ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்.... விவோ விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க பதஞ்சலி நிறுவனம் முயற்சி.... 

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

baba ramdev

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டன. அதேபோல் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் மார்ச் மாத இறுதியில் தொடங்க இருந்த 13வது ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. பின் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து அதிகராப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின.

 

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ இருந்து வருகிறது. இந்தியா, சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலையடுத்து சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழத்தொடங்கின. ஆனால் பிசிசிஐ நிர்வாகம் இந்தாண்டும் விவோ நிறுவனம் ஸ்பான்சராக தொடரும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதனையடுத்து விவோ நிறுவனம் இந்தாண்டிற்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. தற்போது பிசிசிஐ புது ஸ்பான்சரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விவோ விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பதற்கு கோகோகோலா, அமேசான், அதானி குழுமம், டாடா குழுமம், ஜியோ, பைஜுஸ் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. தற்போது அந்தப் போட்டியில் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது.

 

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே. திஜார்வாலா பேசும்பொழுது, இந்தாண்டிற்கான ஐபிஎல் ஸ்பான்சராக இருக்கலாம் என்று யோசித்துள்ளோம், அதன்மூலம் எங்கள் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலக அளவில் ஒரு சந்தை உருவாகும். தற்போது பிசிசிஐ நிர்வாகத்தை முறைப்படி  அணுக உள்ளோம் என்றார்.

 

 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடிதந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்குவாட் மற்றும் ரகானவும் களமிறங்க தொடக்கத்திலேயே 1 ரன் எடுத்து ரகானே ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிச்சல் 11 எண்களும் ஜடேஜா 17 எண்களும் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவன் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுக்கு 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்திருந்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிக்காவுக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டிக்காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று நிதானமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றிப்பெற செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கிகொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தேற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.