Skip to main content

இந்தியாவிற்கெதிரான போட்டி: 12 பேர் கொண்ட அணியை அறிவித்த பாகிஸ்தான்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

INDIA VS PAKISTAN

 

2021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றுமுதல் (23.10.2021) சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இதனைத்தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - விண்டீஸ் அணிகள் மோதவுள்ளன.

 

நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்தப் போட்டியைக் காண வழக்கம் போல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்தநிலையில், நாளைய போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

அந்த அணியில் பாபர் அஸம், முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூப், ஹைதர் அலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 

 

Next Story

‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’.... என்று கூறியபடியே நகர்ந்து சென்ற எல்.முருகன்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

L. Murugan kept moving saying 'Jai Sri Ram', 'Jai Sri Ram' in Erode

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் நேற்று முன் தினம்(14ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வருகிற 2029 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலம் தான் இருக்கிறது என்பதால், இது 2029 ஆம் ஆண்டின் போது நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார்கள். மேலும், இந்த சட்டத்தை வழிமுறைப்படுத்துவதற்கு நிறைய காலம் தேவைப்படுகிறது. அதனால், அதற்கு விசாரணை குழு ஒன்றை அமைத்து நாடு முழுவதும் ஆய்வு செய்த பிறகு தான் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும்.

 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்து அந்த நேரத்தில் சொல்வார்கள். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என்பது தனி சுதந்திரமிக்க அமைப்புகள். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கொண்டு அவர்கள் அந்த சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆ.ராசா போன்றோர்கள் மக்கள் வரிப் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதனால், அமலாக்கத்துறை சோதனையின் மூலம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். 

 

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அகமதாபாத் மைதானத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ இதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டுமென்றால் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’... என்று கூறியபடியே நகர்ந்து சென்றார்.

 

 

Next Story

தங்க ஐ போனை தொலைத்த பிரபல நடிகை

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Urvashi Rautela loses 24 carat gold iPhone during India vs Pakistan match

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண பல்வேறு முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் திரை பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலாவும் கலந்து கொண்டு போட்டியை ரசித்தார். 

 

அப்போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போனைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

 

பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேலா, தமிழில் சரவணா ஸ்டோர் குழுமத்தை சேர்ந்த சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.