Skip to main content

இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்... வரலாறு படைத்தார் பி.வி.சிந்து!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

 India's second medal ... PV Sindhu made history!

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை  21-13, 21-15 என்ற கேம் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இதன்மூலம் பி.வி.சிந்து படைத்துள்ளார்.

 

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால் பி.வி சிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இன்று வெண்கலம் வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது.

 

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'தனது மகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என சிந்துவின் தாயார் விஜயா தெரிவித்துள்ளார். அதேபோல் சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், 'எனது மகளுக்கு பிரதமர் மோடி ஊக்கமளித்தது உற்சாகப்படுத்தினார்' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

'இதயத்திலிருந்து போராடினேன்' - கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாக்‌ஷி மாலிக்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 'Fought from the heart'-Sakshi Malik tearfully announces retirement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி மாலிக் இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்‌ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒரு பெண் தலைவர் வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நடக்கவில்லை என்பதால் தான் ஓய்வு பெறுவதாகவும், இந்த தேர்தலில் பிரிஜ் பூஷண் தொடர்புடையவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Cricket in the Olympics Official notification released

 

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால் - சாஃப்ட் பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 போட்டிகளைச் சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. அதே சமயம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டும், ரஷ்ய வீரர்கள் விருப்பப்பட்டால் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால் - சாஃப்ட் பால், லார்க்ரோஸ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு ஒலிம்பிக் விளையாட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டதற்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.