Skip to main content

காவல்துறை டிஎஸ்பி ஆன ஒலிம்பிக் நட்சத்திரம்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Lovlina Borgohain

 

கரோனா பரவல் காரணமாக 2020 ஆம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஒத்திவைக்கப்பட்டு கடந்தாண்டு நடைபெற்றது. டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன், வெண்கல பதக்கத்தை வென்றார்.

 

இதன்மூலம் மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையையும் லோவ்லினா படைத்தார். இந்தநிலையில் லோவ்லினா போர்கோஹெய்ன் அசாம் காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கான அரசாணையை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, லோவ்லினா போர்கோஹெய்னிடம் வழங்கியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

பெண் காவலருடன் தனிமையில் இருந்த டி.எஸ்.பி; கையும் களவுமாக பிடித்த உறவினர்கள்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Nagapattinam DSP accused of misbehaving with female constables

திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண் காவலர் ஒருவரும் ஆண் காவலர் ஒருவரும் தவறாக நடந்து கொண்ட  சம்பவம் பேசு பொருளாக மாறிய நிலையில்,தற்போது இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வாரத்தில் திருச்சி ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஏட்டுடன், நாகப்பட்டினம் டவுன் டி.எஸ்.பியாக இருக்கும் பாலகிருஷ்ணன் தனிமையில் இருந்ததுள்ளார். அப்போது பெண் போலீஸின் உறவினர்கள் இருவரையும் கையும் களவுமாக வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்த போது, நாமக்கலைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றும் போது ஆயுத படையில் பணியாற்றிவரும் பெண் போலீஸுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாலகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டு டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் போலீசை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் நாகைக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக தங்கியிருந்து விட்டு பின்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளனர்.

வழியில் அவர்களை பிந்தொடர்ந்த பெண் போலீஸின் உறவினர்கள், பாபநாசம் அருகே இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு குற்றவாளியை பிடிக்க வந்திருப்பதாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் பெண் போலீஸின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.எஸ்.பி பாலகிருஷ்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளிடம்  இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம், இதில் நீங்கள் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு உயர் அதிகாரியிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்த வழக்கை கையில் எடுத்த காவல்துறை முதலில் பாபநாசம் பகுதி சாலையில் உள்ள உள்ளுர் போலீசாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து இந்த சம்பவம் குறித்து உண்மைத் தன்மையை அறிய காவல்துறையினர் முயற்சி செய்து வந்த நிலையில்,  தற்போது போலிசுக்கு அதிகபட்சமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம்.

பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றியபோது ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டுடன் உறவு வைத்திருந்தாரோ, அதேபோல்  தற்போது பணியாற்றி வரும் நாகையிலும் இரண்டு பெண் காவலர்களுடன் உறவு வைத்துள்ளாராம். டிஎஸ்பி பாலகிருஷ்ணன் இது தொடர்பான பல புகார்கள் வர ஆரம்பித்துள்ளதால். இவர் பல பெண்களுடன் தனிமையில் இருந்து வருவதும், இவருக்கு பல பெண்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறதாம். முதல்கட்ட விசாரணையில் நாகையில் இரு பெண் காவலர்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.  இவர் மீது உரிய நடவடிக்கை சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.