/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_76.jpg)
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூருஅணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிநடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார்.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூருஅணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார்கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம்கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)