Skip to main content

தோனி, கோலி உலகக்கோப்பையில் எந்த வரிசையில் களமிறங்குவார்கள்? அதிரடி பிளானில் இந்திய அணி...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

dd

 

உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னர் இன்னும் ஒரு தொடர் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணியின் காம்பினேஷன் பற்றி முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பேட்டிங் காம்பினேஷன் தொடர்பாக அணியின் புதுமையான அதிரடி பிளான் பற்றி பேசியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

 

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளின்போது விராட் கோலி, யுவராஜ், தோனி, ரெய்னா என இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மாஸ் காட்டியது. 8 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துவிட்டது மிடில் ஆர்டர். உலகின் தலைசிறந்த டாப் ஆர்டர் (டாப் 3), மாஸ் காட்டும் ஸ்பின் பவுலிங், மிரட்டும் ஃபாஸ்ட் பவுலிங் என பலமுடன் உள்ள இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் பெரிய சோதனையாகவே உள்ளது.  

 

10 வீரர்களுக்கு மேல் 4 முதல் 6 வரையிலான இடங்களில் கடைசி நான்கு வருடங்களில் களமிறங்கியுள்ளனர். ஆனால் தோனியை தவிர வேறு யாரும் இன்னும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யவில்லை. கடைசி சில தொடர்களாக அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். இந்த மூவரும் சில சமயம் சொதப்புகின்றனர். சில சமயம் சிறப்பாக ஆடுகின்றனர். ஆட்டத்தில் நல்ல நிலைத்தன்மையை இன்னும் அடையவில்லை.


 
மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு சில சமயங்களில் கோலி நம்பர் 4-ல் களமிறங்குவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அம்பதி ராயுடு அல்லது வேறு ஒருவர் அந்த நேரங்களில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வார்கள். இது மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலிமைப்படுத்தும். 

 

rr

 

 

18 ரன்களுக்கு 3 விக்கெட்கள் அல்லது 16 ரன்களுக்கு 4 விக்கெட்கள் போன்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் சந்திக்க விரும்பவில்லை. பவுலருக்கு சாதகமாக உள்ள மைதானங்களில் அணியின் சிறந்த பேட்ஸ்மேனை(கோலியை) விரைவாக இழப்பது அணிக்கு நன்மை பயக்காது. எனவே மைதானத்தின் தன்மை, அணியின் பேட்டிங் சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து விராட் கோலி களமிறங்கும் இடம் தீர்மானிக்கப்படும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

 

அனில் கும்ப்ளே தோனியை நம்பர் 4-ஆக களமிறங்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். அனுபவம், சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது பேட்டிங்கை மாற்றிக்கொள்ளும் திறன், மிடில் ஆர்டர் பேட்டிங்கை கன்ட்ரோல் செய்யும் ஸ்கில் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் நான்காவது இடத்தில் விளையாட தோனிதான் சிறந்த வீரர் என கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

 

aa

 

 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் தோனியின் ஆட்டம் சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் ஸ்பின் பவுலர்கள், ஃபாஸ்ட் பவுலர்களில் புவனேஷ் குமார் தவிர வேறு யாரும் பங்களிப்பதில்லை. பேட்ஸ்மேன்களில் கேதர் ஜாதவ் மட்டுமே அவ்வப்போது பார்ட் டைம் பவுலராக விளையாடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதில்லை. இது அணியின் மைனஸாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஆல்-ரவுண்டர் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

 

ரோகித், தவான், கோலி, ராயுடு, தோனி, கார்த்திக், ஜாதவ், ஹர்திக், புவனேஷ், பும்ரா, ஷமி, குல்தீப், சஹால் ஆகியோர் அணியில் உறுதியாக இடம் பெறுவார்கள் எனவும், ராகுல், பண்ட், ஜடேஜா, கலீல், உமேஷ், ஷுப்மான் கில், விஜய் ஷங்கர் ஆகியோரில் இருவர் மீதமுள்ள இடங்களை பிடிப்பார்கள் எனவும் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Next Story

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற கடலூர் வீராங்கனை!  

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்து இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடலூரை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை இளவேனில் வாலறிவன்.  

brazil rifle, pistol world cup 2019 in  wins gold in cuddalore women

இவர் கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியில் பிறந்த இளவேனில் என்ற 19 வயதுடைய கல்லூரி மாணவி தற்போது குஜராத்தில் தாய் தந்தையுடன் மணி நகரில் வசித்து வருகிறார். இவர் துப்பாக்கி சூடும் போட்டியில் பிரேசில் நாட்டில் தங்க பதக்கம் பெற்றதையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய வீராங்கனை இளவேனில் தாத்தா உருத்திராபதியும், பாட்டி கிருஷ்ணவேணியும். "துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தங்கள் ஆசை"  என்று கூறுகின்றனர்


தமிழ்நாட்டுக்கும், கடலூருக்கும் பெருமை சேர்த்த இளவேனில் வாலறிவனை கடலூர் மக்கள் பெருமையோடு வாழ்த்துகின்றனர்.


 

Next Story

பணத்தை வைத்து ஐசிசியை கிண்டலடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது என்று சொல்லலாம். நியூசிலாந்து அடித்த ரன்னை சமன் செய்தது இங்கிலாந்து. இதனையடுத்து ஐசிசியின் விதிப்படி சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் இங்கிலாந்து அடித்த ரன்னை நியூசி அணி சமன் செய்தது. 
 

kane williamson

 

 

இதனால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதிமுறை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பலரும் இதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

இந்நிலையில் இந்த விதிமுறையை அமிதாப் பச்சன் பணத்தை வைத்து கலாய்த்துள்ளார். “உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர் என்பார்கள்” என்று ஐசிசி சொல்வது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.