Skip to main content

"ஆட்டோ  ரிக்‌ஷா ஓட்டி அவர் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும்..." தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாதது குறித்து முகமது சிராஜ் உருக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Mohammed Siraj

 

 

ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளம் வீரரான முகமது சிராஜ் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. இத்தொடருக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தினுள் தங்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக முகமது சிராஜின் தந்தை நேற்று மரணமடைந்தார். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் முகமது சிராஜ் உள்ளதால், ஹைதராபாத்தில் நடைபெறும் அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

தனியார் பத்திரிகை ஒன்றிடம் இது குறித்து பேசிய முகமது சிராஜ், "மகனே... நீ நம் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும். இதுதான் என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. இதை நான் நிச்சயம் செய்வேன். என்னுடைய ஆரம்பக்காலங்களில் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி என்ன மாதிரியான கஷ்டங்களை அவர் அனுபவித்தார் என்பது எனக்குத் தெரியும். அவரது இறப்பு செய்தியைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது. என் வாழ்வின் மிகப்பெரிய ஆதரவை இழந்துள்ளேன். இந்தியாவிற்காக நான் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. இது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதை உணர்கிறேன்" என உணர்ச்சிமயமாகப் பேசினார். இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் முகமது சிராஜிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

அணியின் ரகசியங்களை கேட்ட மர்ம நபர்; முகமது சிராஜ் பரபரப்பு புகார்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

cricketer mohammed siraj contact unknown person related incident 

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அவர் அளித்துள்ள அந்தப் புகாரில், "கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் பணத்தை இழந்த அடையாளம் தெரியாத ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அணியின் உள் ரகசியங்களை சொன்னால் எனக்கு ஒரு பெரிய தொகை தருவதாகக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் முகமது சிராஜின் இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் முகமது சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் என தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்ப்பு! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Mohammed Siraj replaces Bumrah in the Indian cricket team!

 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஒவர் கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை. இந்த நிலையில், காயம் குணமடையாததால், ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.