Skip to main content

"தோனி மாதிரி ஒருவர் தேவைப்படுகிறார்..." வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பேச்சு!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Michael Holding

 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தோனி மாதிரி ஒரு வீரர் தேவைப்படுகிறார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 375 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 308 ரன்கள் மட்டுமே குவித்தது. 

 

இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங், இப்போட்டி குறித்துப் பேசுகையில், "இந்திய அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். தோனி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வரும் போது, சேசிங் செய்வதற்கான மொத்தப் பணியையும் அவர் எடுத்துக்கொள்வார்.  தோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை. தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.

 

ஆனாலும், தோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். தோனி மாதிரி என்றால் தோனி போல திறமை கொண்ட வீரர் மட்டுமல்ல, அவரைப் போல வலிமையான வீரர் தேவை. இந்திய அணி சேசிங் செய்யும் போது தோனி பதட்டப்பட்டு நாம் பார்த்ததில்லை. அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். அதே போல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் தோனி கைதேர்ந்தவர்" எனக் கூறினார். 

 

 

 

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

CSK vs GT: சேப்பாக்கத்தை சிலிர்க்க வைத்த சிவம் துபே!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl live score update csk vs gt shivam dube show

ஐபிஎல் 2024 ஏழாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 3.1 ஓவர்களில் 29-1 என்று ஆடி வருகிறது.