இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தியவர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற அவர், கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனை செய்வதில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 62 வயதான கபில் தேவுக்கு நேற்று இரவு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கபில் தேவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று விராட் கோலி, கெளதம் காம்பீர், ரெய்னா, அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.