Skip to main content

ஒருநாள் ஆட்டத்தில் டி20 ஆடிய வீரர் - மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ISHAN KISHAN

 

இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் இன்று (20.02.2021) தொடங்கின. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் சென்னை, சூரத், பெங்களூர், ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஜார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும் மோதின.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷனும், உத்கர்ஷ் சிங்கும் களமிறங்கினர். உத்கர்ஷ் சிங் விரைவில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் இஷான் கிஷன் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி சதமடித்தார். சதத்திற்குப் பிறகும் அதிரடி கட்டிய இஷான் கிஷன், இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 173 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வெறும் 94 பந்துகளில் 19 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 173 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 184.04.

 

ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம், மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் (516) அடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருட ஐ.பி.எல்லில் அதிக சிக்ஸர் அடித்த வீரரும் இவரே ஆவார். அவர் கடந்த வருட ஐபிஎல்லில் 30 சிக்ஸர்கள் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

MI vs GT: சறுக்கிய ஹர்திக்; சாதித்த சுப்மன் கில்

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
MI vs GT ipl live score update gujarat titans wins

ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.

தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.