IPL AUCTION

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டன. இதனையடுத்து, மெகா ஏலத்தில் எந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில்ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த ஏலம் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

இதற்கிடையே, புதிய ஐபிஎல் அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்குமுன்கூட்டியே மூன்று வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த இரு அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களில் இருவர் இந்தியராக இருக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது.

2022 ஐபிஎல் தொடரின் முதல் போட்டிஏப்ரல் 2ஆம்தேதி, சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதலாம்என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.