team india

2021 இருபது ஓவர் உலகக்கோப்பைக்கானஇந்திய அணி இன்று (08.09.2021) அறிவிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்தியா - இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பே தேர்வுக்குழு, கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் காணொளி வாயிலாக சந்தித்து அணியை தேர்வு செய்துவிட்டதாகவும், இன்று மீண்டும் ஒருமுறை அவர்கள் காணொளி மூலமாக சந்தித்து அணியை உறுதி செய்வார்கள் எனவும், அதன் பிறகு இந்திய அணி அறிவிக்கப்படும் எனவும் அத்தகவல்கள் கூறின.

Advertisment

இந்தநிலையில், இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்திய அணி தேர்வுக்குழு,இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்கவுள்ளது. காணொளி வாயிலாக நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறுவது உறுதியென்றநிலையில், ஷிகர் தவான், கே.எல். ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கே அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவும், அண்மையில் சிறப்பாக விளையாடிவரும் ஷார்துல்தாகூரும் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்என கூறப்படுகிறது.மேலும், காயத்தில் இருந்துமீண்டுள்ளஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்ப உள்ளதாகவும், அதேநேரத்தில்ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ள வாஷிங்டன் சுந்தர் இந்தியஅணியில் இடம்பெறுவது கடினம் எனவும் கூறப்படுகிறது.