இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும்,சுப்மன் கில்லும் அண்மைக்காலமாக விளையாடி வருகிறார்கள். இந்தநிலையில்சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமாக 6-8 வாரங்கள் வரை ஆகலாம் எனதெரிகிறது.
இதனால் இங்கிலாந்து தொடரில் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போவது யார் என கேள்வி எழுந்தது. இந்தநிலையில்இந்திய அணி நிர்வாகம் ப்ரித்விஷாவை இங்கிலாந்து தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால்கே.எல் ராகுலை இந்திய அணி நிர்வாகம், மிடில் ஆர்டரில் ஆடவைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
மயங்க் அகர்வாலும் சமீபத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்பதால், கடந்த விஜய் ஹசாரே (ஒருநாள்) தொடரில் சிறப்பாக ஆடி, ஒரே சீசனில் 800 ரன்களைகுவித்தவர் என்ற சாதனையை படைத்த ப்ரித்விஷாவை தொடக்க ஆட்டக்காரராக விளையாடவைக்கஇங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாகவும், இதுதொடர்பாகஅது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரித்விஷா, தற்போது இலங்கையுடனான ஒருநாள்போட்டியில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.