Skip to main content

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Published on 06/10/2019 | Edited on 06/10/2019

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 191 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 502  ரன்கள் எடுத்தது தென்ஆப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது 

india vs south africa first test match india win


இந்தப் போட்டியில் இந்திய அணியின் அபாரமாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதேபோல் ஜடேஜா  4 விக்கெட்களையும்,  அஸ்வின் 1 விக்கெட்டையும் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

india vs south africa first test match india win


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10- ஆம் தேதி தொடங்குகிறது.

 

Next Story

ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி!

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

india vs england cricket one day match india win the cup

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி.

 

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

india vs england cricket one day match india win the cup

 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78, ஷிகர் தவான் 67, ஹர்திக் பாண்டியா 64 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் காரன் 95, டேவிட் மாலன் 50, லிவிங்ஸ்டன் 36 ரன்களை எடுத்தனர். 

 

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4, புவனேஷ்வர் குமார் 3, நடராஜன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3, ஆடில் ரஷீத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

india vs england cricket one day match india win the cup

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட், டி20 போட்டியுடன், ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

ஒரு நாள் கிரிக்கெட் - இந்திய அணி அபார வெற்றி!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

ind vs eng one day match india had win

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

 

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (23/03/2021) நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 

 

ind vs eng one day match india had win

 

இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 98, ராகுல் 62, குர்னால் பாண்டியா 58, விராட் கோலி 56 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 94, ஜாசன் ராய் 46, மொயின் அலி 30 ரன்கள் எடுத்தனர்.

 

இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4, ஷர்துல் தாக்கூர் 3, புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.