இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட இருக்கிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இத்தொடருக்காக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவருக்கு மாற்றாக வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. அணியில் தற்போது இஷான் கிஷன் மற்றும் ஷுப்மான் கில் சிறப்பான துவக்கத்தை தருகின்றனர்.
அது மட்டுமின்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள ப்ரித்வி ஷா துவக்க ஆட்டக்காரர் என்பதும் உள்ளூர்ப் போட்டிகளில் அதிக ரன்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவதால் சாஹல் இடத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடக்கிறது. இதுவரை மூன்று டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: ஷுப்மான் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்/குல்தீப் யாதவ்
நியூசிலாந்து அணியின் உத்தேச வீரர்கள் விபரம்: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், பென் லிஸ்டர்/ஜேக்கப் டஃபி