
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயானமூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடியஆஸ்திரேலியா 338 ரன்கள்எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்தியஅணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 312ரன்கள் குவித்துடிக்ளர் செய்து, இந்தியாவிற்கு 407 ரன்களைஇலக்காகநிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியஇந்தியா, நல்ல தொடக்கத்தைக் கண்டது. ரோகித் அரைசதமடித்தார். கில்31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவிரைவில் ஆட்டமிழந்தாலும், புஜாராவும், ரிஷப்பந்தும்இணைந்து ரன்களைசேர்க்கத்தொடங்கினர். ரிஷப்பந்த் அதிரடியாக ஆடி, 118 பந்துகளில் 97 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம்நிதானமாக ஆடியபுஜாரா77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அடுத்து ஆடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் இந்திய அணி, போட்டியை சமன் செய்வதற்காக ஆடத்தொடங்கியது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட விஹாரியும், அஸ்வினும்மிகவும் நிதானமாக ஆடினர். 161 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி,23 ரன்களையும், 128 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின், 39 ரன்களையும் எடுத்தனர். இந்த இருவரையும் ஆஸ்திரேலியா அணியால்பிரிக்கமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து இப்போட்டி ட்ராவில் முடிந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)