Skip to main content

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர்; இந்திய அணியில் யார் யார்?

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

team india

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்குமிடையே இருபது ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ளன.

 

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் நடராஜன் அணிக்குத் திரும்பியுள்ளதோடு, சில புதுமுக வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது நடைபெற்று வரும், இருபது ஓவர் தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் பிரசீத் கிருஷ்ணா, இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ரிஷப் பந்த் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். இதுவரை இந்தியாவிற்காக இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடிய க்ருனல் பாண்டியா, காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த ஹார்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

 

இங்கிலாந்திற்கு எதிரான இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சாஹல், குல்தீப் யாதவ், க்ருனல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர்.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

பஞ்சாபில் இணைய சேவைகள் முடக்கம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Internet services cut in Punjab

 

பஞ்சாபில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபை பிரித்து  தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வரும் 'வாரிஸ் பஞ்சாப் டி'  அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக  இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை என 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் அத்தியாவசிய தேவையான தொலைப்பேசி அழைப்புகள், வங்கிக்கான குறுஞ்செய்தி வசதிகளில் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.