Skip to main content

"விராட் கோலியின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர்கள்"... இரு வீரர்களைக் கைக்காட்டும் ஹர்பஜன் சிங்!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

Harbhajan Singh

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

 

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் முழுமையாக விளையாடவுள்ள விராட் கோலி, டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடக்கும் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். இதனால், இந்திய அணி எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளை ரஹானே தலைமையில் விளையாட உள்ளது. விராட் கோலி இல்லாத தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய, ஆஸ்திரேலிய தரப்பு வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எனப் பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து பேசுகையில், "விராட் கோலி முதற்போட்டிக்கு பிறகு இந்தியா திரும்ப இருப்பது, டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கதவுகளைத் திறந்துள்ளது. விராட் கோலி மிகப்பெரிய வீரர். ஒவ்வொரு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும், சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துள்ளார். அவர் இல்லாததை அனைவரும் உணர்வர். அதே நேரத்தில் இது பல வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தரும். கே.எல்.ராகுல், புஜாரா இருவரும் மிகப்பெரிய வீரர்கள். தங்களை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. விராட் கோலி இருக்கிறார், இல்லை என்பது மறக்கவேண்டிய ஒன்று. கடந்த முறை வெற்றி பெற்றதைப்போல மீண்டும் வெல்ல ஆஸ்திரேலியாவில் உள்ளோம் என்பதே நினைவில் வைக்க வேண்டியது" எனக் கூறினார்.

 

 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

T20 series against Australia; Indian team announcement

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. 

 

இந்த நிலையில், இந்த தொடரில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருத்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (WK), வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் துணை கேப்டனாக கடைசி இரு போட்டிகளுக்கு இந்திய அணியுடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.