Skip to main content

தோனி போல கேப்டன்ஸி பண்ணணும்! - ஆயத்தமாகும் மெஸ்ஸி 

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

தோனி பாணியில் கேப்டன்ஷிப்பைக் கையாளப் போவதாக அர்ஜெண்டினா அணியின் கேட்பன் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
 

messi

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக கொண்டாடப்பட்டவர். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இருந்து எப்போது ஓய்வுபெறுவார், திறமையை இழந்துவிட்டார் என பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டாலும், இன்றுவரை தன் விளையாட்டின் மூலமாக அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்து வருகிறார். தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருந்த தோனி, நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் ஆடிய அதிரடி ஆட்டங்களின் மூலமாக மீண்டும் தனது புகழை விரிவுபடுத்திக் கொண்டார்.
 

ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கால்பந்தாட்டப்போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்வதில் வியூகங்கள் என பல்வேறு விதமான கேள்விகளுக்கு அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருமான லியோனல் மெஸ்ஸி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கேப்டன்ஷிப் குறித்து பேசிய அவர், ஒரு கேப்டனாக தோனியைப் போல செயல்படுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது அணுகுமுறைகளை இந்த முறை கையாள முடிவுசெய்துள்ளேன். அதனால், நிறைய மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கிறேன் என பேசியுள்ளார். 
 

 

 

Next Story

யூரோ கால்பந்து தொடர் 2024 : சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்! 

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Euro Football Series 2024: Spain wins the Champions League

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (14.07.2024) இரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. அப்போது ஸ்பெயின் அன்னிக்கு நிக்கோ வில்லியம்ஸ் மைக் ஓயர்சபால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதே சமயம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களுக்குள் ஒருவரான பாலிமர் மட்டுமே 1 கோல் அடித்தார். இதன் மூலம் யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் யூரோ கால்பந்து தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1964, 2008, 2012 மற்றும் நடப்பு (2024) யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது அதே சமயம் இங்கிலாந்து அணி இதுவரையில் பெரிய கால்பந்து தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாத 58 ஆண்டுக்கால சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் யூரோ கால்பந்து தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் அணி பதிவு செய்துள்ளது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். அதே போன்று தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியில் ரோட்ரி வென்றார். 

Next Story

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்த சி.எஸ்.கே!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
CSK kept the fans in suspense

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (12.05.2024) நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி போட்டிக்குச் செல்ல சென்னை அணிக்கு இந்த இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று ஆகும். இதனால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை ஸ்டேடியத்தில் சிறிது நேரம் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது எனவும் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இன்றைய போட்டி முடிந்ததும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பை தோணி அறிவிக்க வாய்ப்பு இருபதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  அதே சமயத்தில் சென்னையில் கடைசி  மேட்ச் நடந்து முடியும் பொழுது அனைத்து பார்வையாளர்களுக்கும் டீ சர்ட், பந்துகள் தரப்படுவது வழக்கம். அதேபோல் அனைவருக்கும் மைதானத்தை சுற்றி வந்து டாடா காட்டிவிட்டு நன்றி சொல்வதும் வழக்கம். இதனால் கூட ரசிகர்களை ஸ்டேடியத்தில் காத்திருக்க சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருக்கலாம் என்று ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது.