Skip to main content

நடு வானில் விமானத்துடன் காணாமல் போன பிரபல கால்பந்து வீரர்...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

gfhngf

 

பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் கால்பந்து அணியை சேர்ந்த முன்னணி வீரரான எமிலியானோ சாலா தனி விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது நடு வானில் மாயமாகியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவரை வேல்ஸ் நாட்டை சேர்ந்த கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி 138 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டிற்கு இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம் மூலம் சாலா பயணித்துள்ளார். அப்போது சனல் தீவின் மேல் பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதற்கு பின் அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

யூரோ கால்பந்து தொடர் 2024 : சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்! 

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Euro Football Series 2024: Spain wins the Champions League

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (14.07.2024) இரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. அப்போது ஸ்பெயின் அன்னிக்கு நிக்கோ வில்லியம்ஸ் மைக் ஓயர்சபால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதே சமயம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களுக்குள் ஒருவரான பாலிமர் மட்டுமே 1 கோல் அடித்தார். இதன் மூலம் யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் யூரோ கால்பந்து தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1964, 2008, 2012 மற்றும் நடப்பு (2024) யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது அதே சமயம் இங்கிலாந்து அணி இதுவரையில் பெரிய கால்பந்து தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாத 58 ஆண்டுக்கால சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் யூரோ கால்பந்து தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் அணி பதிவு செய்துள்ளது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். அதே போன்று தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியில் ரோட்ரி வென்றார். 

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.