Skip to main content

ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
elavenil valarivan

 

 

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  நடந்த ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் இந்தியா சார்பாகத் தங்கம் வென்றார். அதனைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

மேலும் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில்,  ஜூலை 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளவேனில் வாலறிவனும் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது உறுதியாகியுள்ள சூழலில், அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.