சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில்இந்தியாவில் இருந்துதகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதே சமயம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக இதுவரை ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனைவினேஷ்போகத்இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் இந்திய மல்யுத்த வீராங்கனைவினேஷ்போகத்அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப்போட்டியில் இருந்துதகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, “மகளிர் மல்யுத்த 50 கிலோபிரிவில் இருந்துவினேஷ்போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் குழுவினரின் சிறந்த பயிற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) எடையுடன் இருந்தார். இந்த நேரத்தில் குழுவால் மேலும் இது குறித்து கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது.வினேஷின்தனியுரிமையை மதிக்குமாறு இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி கவனம் செலுத்த விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்வினேஷ்போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அமெரிக்க வீராங்கனைசாராவுக்குதங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக உடல்எடையைக்குறைக்கவினேஷ்போகத்இரவு முழுவதும் தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக அவரின் உடல் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவினேஷ்போகத்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ உடல் எடையைவினேஷ்போகத்குறைத்ததாகத்தகவல் வெளியாகியுள்ளது.