/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/David-Warner-1.jpg)
அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
வெற்றியை நெருங்கி வந்து தவறவிட்ட ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் பேசுகையில், "தொடரின் தொடக்கத்தில் எங்களுக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் சிறந்த வீரர்கள் கட்டமைப்பை கொண்டிருந்தன. களத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் மிக முக்கியம். நிறைய கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிடும்போது வெற்றி பெற முடியாது. அடுத்த வருடம் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் தமிழக வீரரான நடராஜன் குறித்து பேசுகையில், "இவ்வருட ஐபிஎல் கண்ட சிறந்த வீரர் நடராஜன். மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்" எனக் கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன், சிக்கனமான ரன் விகிதத்துடன் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)