Skip to main content

சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது... நிவர் புயல் குறித்து வார்னர் பதிவு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

David Warner

 

சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது என 'நிவர்' புயல் குறித்து ஆஸ்திரேலிய வீரரான வார்னர் பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் இரு பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். இன்று காலை பதிவிட்டுள்ள முதல் பதிவில், மேகமூட்டம் சூழ்ந்த கடற்கரையின் புகைப்படத்தைப் பகிர்ந்து "சென்னையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு, இன்று மதியம் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் கொந்தளிக்கும் ஒரு காணொளியைப் பகிர்ந்து, சென்னையின் தற்போதைய நிலை பயமுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

வார்னரின் பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் காணொளி சென்னையில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதால் 'இது சென்னை அல்ல' என்று சிலர் வார்னருக்குப் பதிலளித்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் 'அது சென்னையோ... இல்லையா... இந்திய வீரர்களே இது குறித்துப் பேசாத போது, புயல் குறித்த தகவல் அறிந்ததும் நமக்காகப் பதிவிட்டுள்ளாரே, அதற்கு நன்றி கூறுவோம்' என வார்னருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

புத்தாண்டு தினம்; அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட டேவிட் வார்னர்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
David Warner gave the shock announcement New Year's Day

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (03-01-24) ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார், 

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர், மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டேவிட் வார்னர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் இதுவரை 6,932 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்களை குவித்திருந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில்,தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு வழங்கினார். 

மேலும், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.