Skip to main content

நான் எதிர்பார்ப்பது இதுதான்... சென்னை அணியின் பேட்டிங் குறித்து பயிற்சியாளர் பேச்சு!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

csk coach

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் கடுமையாகத் தடுமாறி வருகிறது.

 

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இனி வரவிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நெருக்கடிக்கு சென்னை அணி உள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர், "முதல் இரு வெளிநாட்டு வீரர்களிடம் இருந்து நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை என்றால் குழிக்குள் விழுந்த நிலையாகிவிடுகிறது. இதற்கான தீர்வை எதிர்நோக்கி இருக்கிறோம். மிடில் ஓவர்களில் கூடுதலான ஆட்டத்தை எங்கள் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு. இறுதிக்கட்டத்தை எட்டும் போது கூடுதல் நெருக்கடியுடன் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதைச் சரிசெய்ய முயற்சிக்கிறோம். சென்னை அணி முதிர்ச்சியான அணி. இங்குள்ள சூழல் பழக்கப்பட்டதாக இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் வழக்கமாக வெளிப்படுத்தும் ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை" எனக் கூறினார்.