தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில். 39 வயதான கெயில் இங்கிலாந்து நாட்டில் இந்த மாத இறுதியில் தொடங்கும் உலகக்கோப்பை போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

chris gayle appointed as west indies vice captain

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வரும் மே 30 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதனையடுத்து மே 31 நடைபெறும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது.

துணை கேப்டன் பொறுப்பு பற்றி கெயில் கூறுகையில், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எப்போதும் எனக்கு பெருமை. உலகக் கோப்பை போட்டி ஸ்பெஷலானது. மூத்த வீரராக, அணியின் கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.