Brian Lara

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரரான கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் தனிநபராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 9 போட்டிகளிலும் களமிறங்கியுள்ள கே.எல்.ராகுல் 525 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா, கே.எல்.ராகுல் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து வகைப் போட்டியிலும் எனக்குப் பிடித்தமான வீரர் கே.எல்.ராகுல்தான். அணி கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆரம்பக் காலங்களில் போட்டியை முடிப்பதில் சற்று சிரமப்பட்டார். தற்போது அதையும் சரி செய்து வருகிறார்" இவ்வாறு பிரைன் லாரா பேசினார்.

Advertisment