Skip to main content

கடைசி பந்தில் பவுண்டரி; பஞ்சாப் த்ரில் வெற்றி

Published on 30/04/2023 | Edited on 01/05/2023

 

A boundary off the last ball; Punjab Thrill win

 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

 

நடப்பு ஐபிஎல் சீசனின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில் சென்னை அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. 19.5 ஓவரில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்ததன் மூலமாக 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 92 ரன்களும், ருத்ராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரான் சிங் 42 ரன்களும், லிவிங்ஸ்டன் 40 ரன்களும், சாம் கரண் 20 ரன்களும், ஷிகர் தவான் 28 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கட்டுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். பஞ்சாப் அணியில் அர்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ரஸா தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர். 

Next Story

'உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஒரு கோடி'- பஞ்சாப் அரசு அறிவிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
'One Crore to the bereaved farmer's family'-Punjab Govt

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

இந்நிலையில்,  பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில்,  இன்று (21-ஆம் தேதி)  காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார்,  விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து,  பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி படுகாயமடைந்தார். அவரை சக விவசாயிகள் மருத்துவமனைக்கு தூக்கி சென்று பாட்டியாவிலுள்ள ராஜிந்திரா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், நடப்பாண்டில் விவசாயப் போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசு சார்பில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் பகவன் சிங், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.