bhavani devi

Advertisment

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவேண்டும்என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரருடையகனவாகஇருக்கும். அந்த கனவை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார் வடசென்னையைச் சேர்ந்த பவானி தேவி. தண்டையார்பேட்டையில் ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு வாள்வீச்சில்ஆர்வம் வந்துள்ளது.

அதனையடுத்து வாள்வீச்சில்தீவிரப் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர், 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்,தகுதிபெறும்வாய்ப்பை இழந்தார். அதனைத் தொடர்ந்து கடுமையானபயிற்சியில்ஈடுபட்டிருந்த அவர், தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளர் என்றசரித்திரத்தைப் படைத்துள்ளார் பவானி.

பவானி தேவிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் வாள் வீசப்போகும்பவானி தேவி, தங்கப் பதக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதேஅனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.