/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsfwsf3w.jpg)
2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. முதலில் இந்தியாவில் நடைபெறவிருந்த போட்டி, கரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நாட்டில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், தற்போது இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியைஇந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. விராட், ரோகித், பும்ரா, கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தைஇந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தப் புதிய ஜெர்சியை'பில்லியன் சியர்ஸ் ஜெர்சி' (billion cheers jersey) என குறிப்பிட்டுள்ளதோடு, இந்தப் புதிய ஜெர்சியின் வடிவம் பில்லியன் கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தால் உந்தப்பட்டது எனவும் கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)