ipl

2008 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபுஎமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்- மேமாதங்களில் நடைபெறும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, விரைவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள், தங்கள் அணிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களை விடுவித்துள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் ஏலம் நடைபெறும்தேதி குறித்துஇந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி18 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வாரிய அதிகாரி, ஏலம் எங்கு எப்போது நடைபெறும்என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரை, இந்தியாவிலேயே நடத்தஅனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனஇந்தியகிரிக்கெட்வாரியத் தலைவர் கங்குலிகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.