/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4925.jpg)
உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 ரன்களை கடந்தனர். பங்களாதேஷ் அணியில் தௌவித் மட்டும் அரை சதத்தை கடந்து 74 ரன்களை குவித்தார். இதன் மூலம், பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்தது.
பவுலிங்கில் ஆஸ்திரேலியா அணியில், ஜாம்பா இரு விக்கெட்களையும், அபோட் இரு விக்கெட்களையும், ஸ்டானிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஹெட் 10 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, டேவிட் வார்னர் 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். மிட்சல் மார்ஷல் 132 பந்துகளில் 177 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதேபோல், ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட 308 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)