டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு (14/11/2021) 06.00 PM மணிக்கு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைக் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 85, குப்தில் 28, கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3, ஆடம் ஸ்ம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து, நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக மார்ஷ் 77, வார்னர் 53 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.