Skip to main content

ஆசிய ஹாக்கி போட்டி-வாகை சூடியது 'இந்தியா'

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

 Asia Hockey Tournament-india won

 

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலபரிச்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா தற்போது 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் நான்காவது முறையாக ஆசிய ஹாக்கி கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

 

30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது.  9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.