இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேசிட்னியில் நடைபெற்றமூன்றாவது டெஸ்ட்போட்டி, சமனில்முடிந்தது. கடைசி நாளானஇன்று, விஹாரி161 பந்துகளில் 23 ரன்களையும், அஸ்வின்128 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்து, போட்டி சமனில்முடிய காரணமாய் இருந்தனர்.
ஹனுமாவிஹாரி- அஸ்வின்இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன்டிம்பெயினுக்கும், அஸ்வினுக்கும் நடந்த உரையாடல் ஸ்டம்ப்மைக்கில்பதிவாகியுள்ளது.
அந்த உரையாடலில், அஸ்வினின்கவனத்தைத் திசை திருப்பச் செய்யும் விதமாக, டிம்பெயின், ‘நீ காபாவிற்கு (நான்காவது டெஸ்ட் நடக்குமிடம்) வருவதற்கு காத்திருக்க முடியவில்லை’ எனகூறினார். அதற்கு அஸ்வின், ‘நீ இந்தியா வருவதற்குஎன்னாலும் காத்திருக்க முடியவில்லை. அது உனதுகடைசிதொடராகஇருக்கும்’ எனஅதிரடியாக பதிலளித்தார்.
மூன்றாவது டெஸ்ட்போட்டி ட்ராவில்முடிந்தநிலையில், அஸ்வின்- பெயின்இடையேயான இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.