anupama bumrah

Advertisment

இந்திய வேகப்பந்து வீச்சளார் பும்ராவும், 'ப்ரேமம்' படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அனுபாமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக, சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இன்ஸ்டாகிராமில் ஒருவரைஒருவர் ஃபாலோ செய்ததும், ஒருவர் புகைப்படங்களை ஒருவர் லைக் செய்ததும் இதற்குக் காரணமாகும்.

கடந்த வருடம் நடிகை அனுபாமா, இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பும்ராவும் நானும் நண்பர்கள் மட்டுமே எனத் தெரிவித்தார். இந்தநிலையில்பும்ரா, நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர், திருமணத்திற்காக விலகியதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது. இந்தநிலையில் அனுபாமா, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்குச் செல்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். குஜராத் பும்ராவின் சொந்த மாநிலமாகும். இதனால் பும்ராவிற்கும், அனுபமாவிற்கும்திருமணம் நடைபெறவுள்ளதாக மீண்டும் செய்திகள் பரவின.

இந்தநிலையில், அனுபாமாவின்தாயார், இந்தச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மலையாள நாளிதழுக்குப் பேட்டியளித்த அனுபாமாவின்தாயார், "அனுபாமாவைப் பற்றி எல்லோரும் மறக்கத் தொடங்கும்போது ஒரு புதிய கதை தோன்றும். நாங்கள் நேர்மறையாகவே அதனைப் பார்க்கிறோம். இதற்கு முன்பும் அனுபாமா மற்றும் பும்ராவை இணைத்துப் பல கதைகள் வெளிவந்தன. இவை இன்ஸ்டாகிராமில், அவர்கள் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை விரும்பாதவர்களால் உருவாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்.இதுபோன்ற, பொய்யான கதைகள் பரவியபின் அவர்கள் ஒருவரையொருவர் ஃபாலோ செய்யவில்லை என நினைக்கிறேன். ஒருமுறைஅனுபாமா படப்பிடிப்பிற்குச் சென்ற அதே ஹோட்டலில் பும்ரா தங்கியிருந்தார். அப்போதுதான், ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். இதுபோன்ற கதை, இப்போது ஏன் வெளிவந்தது என்று எனக்குப் புரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதற்கிடையே பும்ரா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனைதிருமணம் செய்துகொள்ளஇருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.