13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. டெல்லி அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்தார். கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணா அடித்த பந்தை கேட்ச் செய்ய முயன்ற போது, அவரது கைவிரலில் பந்து பலமாகத் தாக்கியது. காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து அமித் மிஸ்ரா விலகியுள்ளார்.
நடப்புத் தொடரில் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சு டெல்லி அணிக்கு பக்கபலமாக இருந்ததால், அவரது விலகல் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.